எம்.ஜி.ஆர் சிலைக்கு முக்காடு போட்ட போலீஸ்.! இரவு நேரத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு.! palaya vannarapettai mgr statue damaged by some culprits

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள காளிங்கராயன் தெருவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் சிலை அமைந்துள்ளது. கடந்த 1994 இல் ஜெயலலிதாவின் 46வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அதிமுக அமைச்சரான ஜெயக்குமாரால் இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. 

MGR

அன்றாடம் காலையில் அதிமுக தொண்டர்கள் அந்த சிலை இருக்கின்ற பகுதிக்கு சென்று இடத்தை சுத்தப்படுத்திவிட்டு அதற்கு மாலை அணிவிப்பது வழக்கம். வழக்கம் போல, இன்றும் அவர்கள் சிலையை பராமரிக்க காலையில் வந்த போது இரவோடு இரவாக யாரோ சிலையின் மீது சிவப்பு நிற பெயிண்டை ஊற்றி அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

MGR

இந்த சம்பவம் பற்றி உடனடியாக அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல்துறையினர் அருகில் இருக்கும் சிசிடிவிகளை கைப்பற்றி இந்த மோசமான செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். 

வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுகவின் மாநாடு மதுரையில் நடக்க உள்ள நிலையில் மர்ம நபர்களால் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.