அரசியல் தமிழகம்

சற்றுமுன்...! ஓபிஸ் பிரச்சார வாகனம் நீலகிரி அருகே விபத்து!

Summary:

Ops election canvas car accident

 

 

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 18-ந் தேதி  தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலை௭யில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் கொளுத்தும் வெயிலிலும் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன.

பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நீலகிரி மக்களவை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.


அங்கு நடக்கவிருக்கும் பிரச்சாரத்திற்காக, ஓட்டுநர் வாகனத்தை ஊட்டியிலிருந்து கூடலூருக்கு எடுத்துச் செல்லும் போது நடுவட்டம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இதில், ஓட்டுநர் மற்றும் உடன் சென்ற இருவருக்கு சிறு காயம் காயம் ஏற்பட்டது. 


Advertisement