பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது - ஸ்டாலின்!MK Stalin roasted to BJP in theni

இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளது. ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

MK Stalin

அந்த வகையில் திமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று தேனி, திண்டுக்கல் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு  பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் ஜனநாயகம் இருக்காது. மேலும், மாநில அரசுகளின் அங்கீகாரம் இருக்காது. ஒற்றை சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றிவிடுவார்கள்.

MK Stalin

மேலும், இவ்வளவு நாட்களாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற பிரதமர், தற்போது தேர்தல் வந்துள்ளதால் உள்நாட்டிலேயே சுற்றி வருகிறார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு எந்த பலமும் இல்லை என அவர் விமர்சித்துள்ளார்.