அரசியல் தமிழகம் சினிமா

கொச்சைப்படுத்தப்பட்ட எங்களது உறவு எப்படிப்பட்டது தெரியுமா ? கருணாநிதியின் உறவு குறித்து வேதனையுடன் கூறிய குஷ்பூ .!

Summary:

கொச்சைப்படுத்தப்பட்ட எங்களது உறவு எப்படிப்பட்டது தெரியுமா ? கருணாநிதியின் உறவு குறித்து வேதனையுடன் கூறிய குஷ்பூ .!

திமுக தலைவர் கருணாநிதிக்கும் எனக்கும் இருந்த உறவை சிலர் கொச்சைப்படுத்தி கேவலமாக பேசினர் என குஷ்பு  வருத்தத்துடன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

 அரசியலில் களம் இறங்கிய நடிகை குஷ்பு முதலில் திமுகவில் இணைந்துதான் செயல்பட்டு வந்தார்.ஆனால் அவர் ஆட்சியில் இருக்கும்போதே ஸ்டாலின் குறித்து தவறான கருத்தை தெரிவித்ததால் தொண்டர்கள் அவரது வீட்டை தாக்கினர்.

 மேலும் இதன் பின்னர் குஷ்பு திமுகவிலிருந்து விலகினார்.பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்புவிற்கு தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. இவ்வாறு குஷ்பு காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் அவ்வப்போது திமுக குறித்த தனது கருத்துக்களையும் கூறி வந்தார்.

    kushpoo with karunanidhi க்கான பட முடிவு

 இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்குப் பின்பு தலைவராக பதவியேற்ற ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறி 'இளவரசர் அரசர் ஆகிவிட்டார்' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் சமீபத்தில் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி அரங்கத்தில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் புகழ் வணக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட குஷ்பு கூறியதாவது,தமிழ் நாட்டுக்காகவும் தமிழக மக்களுக்கும் இறுதிவரை போராடிய கலைஞர் கருணாநிதியிடம் இருந்து நான் அரசியலையும்,தமிழையும் கற்று கொண்டேன்.

kushpoo க்கான பட முடிவு

 மேலும் எனக்கு தமிழ் மொழி மீதான பற்று வளர்வதற்கு கருணாநிதியே முக்கிய காரணம். அதுமட்டுமின்றி எனக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ளிட்ட கொள்கைகளை கற்றுக் கொடுத்ததும்,மரியாதை என்பதற்கான அர்த்தத்தை கற்றுக்கொடுத்ததும் கருணாநிதிதான்.

 எனக்கும் கருணாநிதிக்கும் இடையே உள்ள உறவு தந்தை-மகள் போன்றது புனிதமானது .ஆனால் சிலர் இதனை கொச்சைப்படுத்தி கேவலமாகவும் கூறியுள்ளனர். என வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


Advertisement