BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
கட்டிலுக்கு அடியில் ரௌடிகளை பதுக்கிவைத்த அரசியல்கட்சி பிரமுகர் கைது; காவல்துறை அதிரடி.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ். இவரின் மனைவி ரூபின்ஷா. விசிக பிரமுகரான அலெக்சின் மனைவி ரூபின்ஷா, விசிக கவுன்சிலராகவும் இருந்து வருகிறார்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, குற்றச்செயலில் ஈடுபட்டுள்ள ரௌடி கும்பலுக்கு அலெக்ஸ் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது.
விசிக பிரமுகர் கைது
இதனையடுத்து, அலெக்சின் வீட்டிற்கு அதிரடியாக சென்று சோதனை நடத்திய அதிகாரிகள், கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்த ரௌடிகளை கையும் களவுமாக கைது செய்தனர்.
இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அலெக்ஸ் தலைமறைவான நிலையில், அவரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை அதிகாரிகளால் அலெக்ஸ் கைது செய்யப்பட்டார்.