தமிழ்நாடு முதல்வராக உதயநிதி ஸ்டாலின்; நடிகர் கருணாஸ் புகழாரம்.!
திமுக பவளவிழா மாநாடு காஞ்சிபுரத்தில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திமுக தொண்டர்கள், மூத்த தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் திரளாக கலந்துகொண்டனர். மேடையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் தொண்டர்களிடையே உரையாற்றியும் இருந்தனர்.
திமுக ஆட்சியே
இந்நிலையில், திமுக பவள விழாவில் கலந்துகொண்ட நடிகர் கருணாஸ், "வெள்ளிவிழா கொண்டாடியபோது திமுக ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. பொன்விழா கொண்டாட்டத்தின்போதும் திமுக ஆட்சியில் இருந்தது. பவள விழாவிலும் திமுக தான் ஆட்சியில் இருந்தது.
இதையும் படிங்க: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. டெலீட் செய்யப்பட்ட திருமாவளவனின் பதிவு.. தமிழக அரசியலில் சலசலப்பு.!
இதேபோல, நூறாண்டு விழா கொண்டாட்டத்தில் திமுக ஆட்சியில் இருக்கும். அப்போது, அனைவர்க்கும் ட்விஸ்ட் ஒன்று இருக்கும். அன்றைய நாளில் ஏன் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் முதல்வராக இருப்பார்" என புகழாரம் சூட்டும் வகையில் பேசினார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் தவெக மாநாடு தேதியில் மாற்றம்.. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.!!