காங்கிரஸ் கட்சியின் தலைமையில் பிரச்சனையா?... பாஜக உருட்டு செல்லாது... கே எஸ் அழகிரி பேச்சு..!

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் பிரச்சனையா?... பாஜக உருட்டு செல்லாது... கே எஸ் அழகிரி பேச்சு..!


Is there a problem in the leadership of the Congress party?... BJP will not roll over... KS Alagiri's speech..!

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல்காந்தி தான் காங்கிரஸ் தலைவர் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

சென்னை வேப்பேரியில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள் தவறானது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதனை தமிழகம் ஒன்றாக நின்று சுட்டிக்காட்டி, மதசார்பற்ற கூட்டணிக்கு பெருவாரியான வெற்றிகளை தந்ததுபோல, இந்த முறையும் தர வேண்டும். மேலும் நமது கருத்துகளை பிரசாரங்கள் மூலம் இன்னும் அதிகரிக்க வேண்டும். திரும்ப, திரும்ப மக்களிடம் சொல்ல வேண்டும். வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி தலைமையில் பிரச்சினை இருப்பதாக பா.ஜ.க. ஒரு மாயையை உண்டாக்குகிறது. ராகுல்காந்தியின் தலைமையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்கிறது. லட்சிய பாதையை அடைவதற்காக ராக…