வேட்டையன் படம் ஓடிய திரையரங்கில் காலாவதியான பாப்கார்ன்; ரஜினி ரசிகர்கள் ஆவேசம்.!
#Breaking: ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு வட்டியில்லா கடன் - வேளாண் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு.!
2 ஆயிரம் ஊரக கிராம சாலைகள் அமைக்கப்படும், விவசாயிகளுக்கு ஊரக வளர்ச்சி துறையோடு இணைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2023 - 24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பேசியவை பின்வருமாறு,
23 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் மேலாண்மை பணியின் மூலமாக ஊரக வளர்ச்சி துறையோடு இணைந்து இயற்கை விவசாயத்தை அதிகரிக்க ரூ.6 ஆயிரம் கோடி செலவில் தடுப்பணை, பண்ணை குட்டை, கால்வாய் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலமாக தேன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமத்தில் 2 ஆயிரம் கி.மீ ஊரக சாலைகள் அமைக்க ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு வட்டியில்லா கடன் வேளாண் கூட்டுறவு சங்கம் மூலமாக வழங்க ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன் வளர்ப்பை ஊக்குவிக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பசுமை தமிழ் இயக்கம் மூலமாக சந்தனம், செம்மரம், தேக்கு கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. வீடு, சொந்த நிலங்களில் வைக்கப்பட்ட இம்மரங்களை எதிர்காலத்தில் வெட்டுவதற்கான நடவடிக்கைகள் வனத்துறை மூலமாக பேசி எளிமையாக்கப்படும்.
கடந்த ஆண்டு ரூ.33 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் கூடுதலாக ரூ.5897 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடப்பு ஆண்டு அறிவிப்புகளுக்கு மொத்தம் ரூ.38904 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்யும் மையம் அமைக்கப்படும்.
திருச்சி - நாகப்பட்டினம் இடையே ரூ.1000 கோடி செலவில் வேளாண்மை சார்ந்த தொழில் நிறுவனங்கள் அமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.