அ.தி.மு.க வரலாற்றில் இது புதுசு!.. எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு: களைகட்டும் மதுரை..!

அ.தி.மு.க வரலாற்றில் இது புதுசு!.. எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு: களைகட்டும் மதுரை..!


in-the-history-of-admk-this-is-the-madurai-district-whe

வரும் 29 ஆம் அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு வருவதையொட்டி அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக நாளை காலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

மாண்புமிகு அம்மாவின் அருளாசியுடன், ஒன்னரை கோடி தொண்டர்களின் பாதுகாவலர், கழக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர், பாசமிகு அண்ணன் எடப்பாடியார் வருகின்ற 29ஆம் தேதி மாலை 5மணிக்கு மதுரையில் உள்ள பழங்காநத்தம் நடராஜா தியேட்டர் அருகில் மதுரை மாநகர், மதுரை புறநகர் மேற்கு, மதுரை புறநகர் கிழக்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெறும்  மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார், 

இதற்கான ஏற்பாட்டினை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர். பி. உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி. வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றனர்,

இதனைத் தொடர்ந்து அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது  தொடர்பாக கழக அம்மா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பிலும் ஆலோசனை கூட்டம், நாளை (26.9.2022) காலை 9 மணிக்கு டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெறுகிறது.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழக, வட்டக் கழக நிர்வாகிகளும், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்பு நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், கழக செயல்வீராகனைகள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.