டெல்லியில் கால் வைத்தவுடன் அதிரடி அரசியலை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி..!

டெல்லியில் கால் வைத்தவுடன் அதிரடி அரசியலை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி..!


Edappadi Palaniswami started active politics as soon as he set foot in Delhi

பல்வேறு தடைகளை தாண்டி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வம், வைத்திய லிங்கம், மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி. பிரபாகர் ஆகியோர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதன் பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அக்கட்சியில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்களான ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி மற்றும் ஜெயபிரதீப் ஆகியோரும் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் வகித்து வந்த சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சார்ஆர்.பி. உதயகுமாரை சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில் பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் என்ற அந்தஸ்துடன் இருக்கும் ரவீந்திரநாத்தின் அந்தஸ்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

ஓ.பி.ரவீந்திரநாத் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை பாராளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.கவில் இருந்து ரவீந்திரநாத் நீக்கப்பட்டுள்ளதால் அவரை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ள கூடாது என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி கடிதத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரது நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு ரவீந்திரநாத் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு முகாந்திரமும் ஏதும் இல்லை. மேலும் பழனிச்சாமி தரப்பில் நடத்திய பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன என அவர் அதில் கூறியுள்ளார்.