திமுக எம்.பி உருவ பொம்மையை தூக்கிலிட்ட இந்து முன்னணி அமைப்பினர்.. நெல்லையில் சம்பவம்., கொந்தளிப்பில் திமுக தொண்டர்கள்.!

திமுக எம்.பி உருவ பொம்மையை தூக்கிலிட்ட இந்து முன்னணி அமைப்பினர்.. நெல்லையில் சம்பவம்., கொந்தளிப்பில் திமுக தொண்டர்கள்.!


DMK MP A Raja Statue Hanged in Tirunelveli Bridge

ஆ. ராசாவின் உருவ பொம்மையை மர்ம நபர்கள் தூக்கிலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சமீபத்தில் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  பல தரப்பினரும் ஆ. ராசாவுக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கே.டி.சி. நகர் மேம்பாலத்தில், நேற்று இரவில் ஆ. ராசாவின் உருவ பொம்மை தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது. 

dmk

இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உருவ பொம்மையை அகற்றினர். 

மேலும், பாலத்தில் இந்து முன்னணி சார்பில், "இந்து பெண்களை விபச்சாரி என கூறிய ஆ. ராசாவை தூக்கிலிடு" என்ற வாசகமும் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் இந்து முன்னணி அமைப்பினர் இச்செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த தகவல் திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.