#Breaking: அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி.!

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், மூத்த திமுக நிர்வாகியும், மாநில நீர்வளத்துறை அமைச்சருமானவர் துரைமுருகன்.
தற்போது 86 வயதாகும் அமைச்சர் துரைமுருகன் தொடர்ந்து காட்சிப்பணிகள், மக்கள் நலத்திட்ட பணிகளில் கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: பெரியாருக்கு எதிரான சீமானின் வாதம்.. திருமாவளவன் சொல்வது என்ன?
மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், இன்று அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
லேசான உடல் சோர்வுடன், சளி தொடர்பான பிரச்சனை இருந்ததால், அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நலம் நல்ல நிலையில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரிக்க முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
இதையும் படிங்க: கவுன்சிலர் கூட ஆக முடியாது - பாஜக அண்ணாமலையை கலாய்த்த அமைச்சர் சேகர்பாபு.!