BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"விடியல் ஆட்சி விடியற்காலையிலே பறி போன உயிர்..." திமுக அரசுக்கு தமிழிசை கண்டனம்.!!
சென்னை கண்ணகி நகரில் மின்சார வயர் அறுந்து மழை நீரில் விழுந்ததில் அதிகாலை துப்புரவு பணிக்குச் சென்ற வரலட்சுமி என்ற இளம் பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தை கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் சீர் செய்யப்படாத சிங்கார சென்னை இன்னும் எத்தனை உயிர்களை பழிவாங்க போகிறது.? என பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அவர், கண்ணகி நகர் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த சகோதரி வரலட்சுமி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகாலையில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் வரலட்சுமி உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகவும் வருந்தினேன். வரலட்சுமி தன் உயிரை தியாகம் செய்து பல உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். காலையில் அவர் துப்புரவு பணிக்கு செல்லவில்லை என்றால் பல பேர் மின்சார வயர் அறுந்து விழுந்த தண்ணீரை மிதித்து பலியாகி இருப்பார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள தமிழிசை சௌந்தர்ராஜன், சீரமைக்கப்படாத சிங்கார சென்னை பல உயிர்களைக் காவு வாங்கி கொண்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார். மாநகராட்சியின் கட்டமைப்பு சரியில்லாததால் தான் இது போன்ற உயிர்ப்பலிகள் நடக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். லேசாக மழை பெய்ததற்கே இன்று நாம் ஒரு உயிரை இழந்திருக்கிறோம். பெரும் மழை மற்றும் வெள்ளம் வந்தால் எத்தனை உயிர்களை பழி கொடுக்கப் போகிறோம் என அச்சமாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "காசு தரலன்னா, போட்டோ ரிலீஸ்.." இன்ஸ்டா நட்பால் இளம் பெண்ணுக்கு வந்த வினை.!! தந்தை, மகன் கைது.!!
இதுகுறித்து நான் பதிவு செய்தால் உடன்பிறப்புகள் வந்து இதுபோன்ற சம்பவங்கள் உத்தர பிரதேசத்தில் நடக்கவில்லையா.? அல்லது மத்திய பிரதேசத்தில் நடக்கவில்லையா.? என கேள்வி எழுப்புவார்கள். அங்கே நடப்பவை இருக்கட்டும். நம் உயிரை நாம் பாதுகாக்க வேண்டும். விடியல் ஆட்சி என்று சொன்னீர்கள் இன்று விடியற் காலையிலேயே ஒரு உயிரை இழந்து நிற்கிறோம். இதுதான் உங்களது ஆட்சியின் லட்சணமா.? என தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: "கொடி கம்பமே நட தெரியல நீங்க அடுத்த முதல்வரா..." நடிகர் விஜய்க்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி.!!