தி.மு.க கவுன்சிலரின் கணவர் அத்துமீறல்: சுகாதார பணியாளர்கள் சங்கம் புகார்..!

தி.மு.க கவுன்சிலரின் கணவர் அத்துமீறல்: சுகாதார பணியாளர்கள் சங்கம் புகார்..!


DMK councilor's husband violates health workers union complaint

கோவை மாநகராட்சி, 61 வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ஆதிமகேஸ்வரி. இவரது கணவர் திராவிட மணி. இவர் நேற்று முன்தினம் தனது வார்டுக்கு உட்பட்ட சுகாதார அலுவலகத்தில், சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு, அதிகார தோரணையில் சுகாதார பணியாளர்களின் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்ததாகவும், அவர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

சுகாதார பணியாளர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதையும், என்ன வேலை செய்ய வேண்டும் என்பதையும் னான் தான் முடிவு செய்வேன் என்று உத்தரவிட்டதாகவும்  புகார் எழுந்துள்ளது. இதனை அங்கிருந்த ஓருவர் தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்ததுடன், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க பெண் கவுன்சிலர் ஆதிமகேஸ்வரியின் கணவருடைய  அத்துமீறிய செயலுக்கு, தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையரிடமும் புகார் அளித்துள்ளனர்.  .