“நீதிமன்றம் தேவையில்லை; மக்கள் மன்றமே போதும்" இடைத்தேர்தலை சந்திக்க தினகரன் அணி தயார்

“நீதிமன்றம் தேவையில்லை; மக்கள் மன்றமே போதும்" இடைத்தேர்தலை சந்திக்க தினகரன் அணி தயார்


Dinakaran team is ready for sub election

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து தினகரன் ஆதரவாளர்களான 18 சட்டமன்ற உறுப்பினர்களை  சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார் .18 சட்டமன்ற உறுப்பினர்களும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 

இந்நிலையில் கடந்த 25ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லுபடியாகும் என தீர்ப்பளித்தது.

Dinakaran team is ready for sub election

இந்தத் தீர்ப்பு டி.டி.வி தினகரன் தரப்புக்குப் மிகப்பெரிய பின்னடைவை அளித்தது. இதனால் முதல்வர் எடப்பாடி அணியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனையடுத்து தினகரனின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வாரா இல்லையா என அனைவரும் எதிர்ப்பார்த்து வந்தனர். 

இந்நிலையில் திடீர் திருப்பமாகச் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக தினகரன் தெரிவித்தள்ளார். 

இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன், ``இந்த ஆளும் ஆட்சி எப்போதோ கவிழ வேண்டியது. ஆனால், எங்கள் எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கால் தான் இவ்வளவு நாட்கள் இவர்களால் ஆட்சியில் காலம் தள்ள முடிந்தது.

Dinakaran team is ready for sub election

இனியும் மேல்முறையீடு என்ற பெயரில் இந்த ஆட்சிக்கு மறைமுகமாக உதவ விரும்பவில்லை. இதனாலேயே தான் எனக்கு மேல்முறையீட்டில் விருப்பமில்லை என்று கூறினேன். ஆனால், பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன். தொகுதி மக்களின் விருப்பப்படி தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானோர் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளனர். இன்னும் ஒரு சிலர் விரைவில் தங்கள் கருத்துகளைச் சொல்லவுள்ளனர். அதன்பிறகு அதிகாரபூர்வமாக தேர்தலைச் சந்திப்பது குறித்து அறிவிப்பேன். 

அநேகமாக வரும் 31-ம் தேதி அல்லது 1-ம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிடப்படும். அ.தி.மு.க இப்போது பலவீனமாக உள்ளது. அதனால்தான் கட்சியில் மீண்டும் இணையுமாறு தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர். அ.தி.மு.க இப்போது வெறும் கூடுதான். அ.ம.மு.க-விடம் உயிரோட்டம் உள்ளது" எனத் டிடிவி தெரிவித்துள்ளார்.