தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கூண்டோடு கைது..!

தர்ணாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்கள் கூண்டோடு கைது..!


Congress MPs including Rahul Gandhi who participated in dharna were arrested with cages

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக 2 வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றம் கூடியதில் இருந்தே சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை, ஜி.எஸ்.டி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் வெளியேறிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களின் பேரணியை விஜய் சவுக் பகுதியில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சாலையில் அமர்ந்து ராகுல்காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தர்ணா போராட்டத்தை கைவிடும்படி காவல்துறையினர் கோரிக்கை விடுத்தபோதும் அதனை ராகுல்காந்தி ஏற்கவில்லை. இதனையடுத்து, குடியரசுதலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்று தர்ணா போராட்டத்தி ஈடுபட்ட ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.