மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
தோனி அரசியலுக்கு வருகிறாரா.? காங்கிரஸ் எம்.பி. புதிய தகவலால் பரபரப்பு.!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் அரசியல் வருகை பற்றிய ஒரு தகவலை காங்கிரஸ் எம்.பி ராஜிவ் சுக்லா பகிர்ந்துள்ளார்.
பிரபலங்களின் அரசியல் வருகை
சினிமா மற்றும் விளையாட்டு துறையில் பிரபலமாக இருப்பவர்கள், அவர்களது ஓய்வு காலத்திற்கு பின்னர் அரசியலுக்கு வருவது இந்தியாவில் புதிதல்ல. ஏற்கனவே, சி எஸ் கே வீரரான ஜடேஜாவின் மனைவி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான். அந்த வகையில், தற்போது அதிகப்படியான ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் மகேந்திர சிங் தோனி அரசியலுக்கு வருவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: கட்சியின் விதியை மீறி செயல்பட்ட அதிமுக நிர்வாகி; அதிரடி காட்டிய தலைமை.. பறந்தது உத்தரவு.!
மறுத்த தோனி
ஆனால், இது பற்றி தோனியிடம் சமீபத்தில் கேட்டபோது, அது உண்மை இல்லை என்று அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எம்பி ராஜிவ் சுக்லாவிடம், 'தோனி அரசியலுக்கு வருவாரா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி பேட்டி
அதற்கு, அவர் "அதைப்பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை அப்படி நடந்தால் அவர் பிரபலமாக இருக்கும் காரணத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார். அரசியலுக்கு தேவைப்படக்கூடிய மக்கள் ஈர்ப்பு தோனியிடம் இருக்கிறது. அவர் ஒரு நல்ல தலைவராக நிச்சயம் இருக்க முடியும்." என்று தெரிவித்துள்ளார்.