BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அச்சச்சோ.. தமிழகத்தில் மீண்டும் கொரோனா: தமிழக பாஜக எம்.எல்.ஏ., முக்கியப்புள்ளி பாதிப்பு..!
கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிரணியின் தேசிய தலைவருமான வானதி ஸ்ரீனிவாசனுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது.
அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வானதி ஸ்ரீனிவாசன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில நாட்களாகவே தொடர் ஜலதோஷம், இருமல் உட்பட உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட வானதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.