தொடர்ந்து 6 முறை வெற்றிபெற்ற மத்திய அமைச்சர் மரணம்; சோகத்தில் மூழ்கியது பாஜக!.
புற்று நோய் காரணமாக கடந்த 2 மாதங்களாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய விவாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் இன்று அதிகாலையில் காலமானார்.
மத்திய அமைச்சர் அனந்தகுமார், ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவரங்களை கவனித்து வந்தார். இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பியும் உடல் நிலை சரி ஆகாத நிலையில் கடந்த 2 மாதங்களாக பெங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் அனந்த குமார் மரணம் அடைந்தார். இதனையடுத்து பாஜக கட்சி நிர்வாகிகள் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் 1996,98, 99,2004,2009,2014 என 6 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெறற தேர்தலில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ரசாயனம், உரம் மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அனந்த குமார் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் அவருக்கு அரசு முழு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.