இந்த கூட்டணி பயங்கரமா இருக்கே! ஒன்று கூடும் அமமுக, பாமக மற்றும் ஓபிஸ் அணி?! விழிபிதுக்கும் திமுக, அதிமுக!

இந்த கூட்டணி பயங்கரமா இருக்கே! ஒன்று கூடும் அமமுக, பாமக மற்றும் ஓபிஸ் அணி?! விழிபிதுக்கும் திமுக, அதிமுக!



AMMK PMK OPS alliance in 2024 election

ல்லா தேர்தலிலும் தொடரும் தொடர்கதையாக வருகின்ற 2024 தேர்தலிலும் திமுக, அதிமுக என்று இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு முன் - ஜெயலலிதாவிற்கு பின் என்று பிரிக்கும் அளவிற்கு அதிமுக கட்சி உடைந்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த டிடிவி தினகரன் அமமுக என்னும் கட்சியை உருவாக்கி குறிப்பிட்ட சமுதாயத்தின் பலத்தோடும் அவரது ஆதரவாளர்களோடும்   கட்சியினை நடத்தி வருகிறார். 

இந்த நிலையில் தற்போது ஓபிஎஸ்ஸும் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றுள்ளதை தொடர்ந்து வருகின்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஓபிஎஸ் அணி மூன்றும் சேர்ந்து ஒரு புதிய கூட்டினியை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டணியில் மக்கள் நீதி மையமும், தேமுதிகவும் இணைவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படியாக பல்வேறு யூகங்கள் இருப்பினும் இந்தக் கூட்டணி எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தேர்தல் நெருக்கத்தில் தான் கூற முடியும். மேலும் பாஜக - அதிமுக கூட்டணியில் அமமுக, தேமுதிக மற்றும் பாமகவை இணைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அப்படியே அந்த கூட்டணியில் இணைந்து விட்டால் மேலே சொன்ன இந்த புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமமுக, பாமக மற்றும் ஓபிஎஸ் அணி இணைவதோடு அவர்களது கூட்டணியில் மக்கள் நீதி மையம் மற்றும் தேமுதிக இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்கினால் நிச்சயம் வருகின்ற தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.