உச்சக்கட்ட பரபரப்பு! தவெக அமைச்சரவையில் 8 அதிமுக எம்எல்ஏக்கள்.? சட்டப்பேரவையில் முதல்வர் முன் நடந்த அந்த ஒரு விஷயம்! அடுத்த 2 நாட்களில் நடக்கும் அதிரடி அரசியல்!!!



aiadmk-mla-support-to-vijay-govt-political-buzz

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், அதிமுகவுக்குள் புதிய அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையை எதிர்த்து கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர்ச்சியான தோல்விகள் ஏற்பட்டதால், அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், சி.வி.சண்முகம் தலைமையிலான சில எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்க முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன.

இதையும் படிங்க: சி.வி.சண்முகத்தின் தில்லுமுள்ளு வேலை.... எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி! அவசர மீட்டிங்.... அதிர்ச்சியில் அதிமுக!!!

சட்டசபையில் தனித்தனி அணிகள்

இந்த தகவல்களுக்கு வலு சேர்க்கும் வகையில், இன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வில் அதிமுகவினர் இரு பிரிவாக செயல்பட்டது கவனத்தை ஈர்த்தது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒரு அணியாக வந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் தனியாக வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், சி.வி.சண்முகம் சட்டப்பேரவைக்கு வந்த பின்னர் திடீரென பாதியிலேயே வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

விஜய்க்கு வணக்கம் தெரிவித்த வேலுமணி

இதற்கிடையில், பதவியேற்பு நிகழ்வுக்கு முன்பாக முதலமைச்சர் விஜய்க்கு எஸ்.பி.வேலுமணி நேரில் வணக்கம் தெரிவித்த சம்பவமும் பேசுபொருளாகியுள்ளது. அதன்பின் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது வெளியாகும் தகவலின்படி, சுமார் 30 அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்றும், இதில் 8 பேர் அமைச்சரவையில் இடம்பெற இருப்பதாகவும் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. 

அடுத்த சில நாட்கள் முக்கியம்

அதிமுகவுக்குள் உருவாகியுள்ள இந்த உள்கட்சிப் பரபரப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் அரசியல் நகர்வுகள் வேகமெடுக்கக்கூடும் என்பதால், அனைத்து தரப்பினரும் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: #அதிர்ச்சி : அதிமுக தலைமை பொறுப்பிலிருந்து எடப்பாடி விலகல்? திட்டவட்டமாக காயை நகர்த்தி விஜயை நேரில் சந்திக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்...இன்று வெடிக்கும் பூகம்பத்தாலும் தெரியப்போகும் இறுதி முடிவு....!!!