அரசியல் தமிழகம்

உள்ளாட்சி தேர்தல் முடிவு நேரத்தில் அதிமுகவின் முக்கிய புள்ளி மரணம்! சோகத்தில் மூழ்கிய அதிமுகவினர்!

Summary:

admk Former speaker died


அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன்  கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள போரூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை  பெற்ற வந்தார். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். 

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன் (வயது 74). அதிமுகவைச் சேர்ந்த இவர் 1985 முதல் 1989 வரை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தார். 

 ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக பிளவுபட்டப்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பி.எச்.பாண்டியன்.

1999 ல் நெல்லை மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு வென்றுள்ளார். இவரது மகன் மனோஜ்பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


Advertisement