ஒருவிரல் புரட்சி? அண்ணாமலைக்காக விரலை வெட்டிய பாஜக நிர்வாகி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!a BJP Worker Cutoff Finger for Supporting Annamalai 

 

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அண்ணாமலைக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். 

தற்போது 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ராமலிங்கம் கடந்த 10 நாட்களாக அண்ணாமலைக்கு ஆதரவாக கோயம்புத்தூர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில், அவரை இன்று தொடர்புகொண்ட நண்பர் ஒருவர், அண்ணாமலை தமிழ்நாட்டில் வெற்றிபெறமாட்டார். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு குறைவு என பேசியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரிடம் வாக்குவாதம் செய்தவாறு ராமலிங்கம் தனது கை விரலை வெட்டிக்கொண்டார். அவரை மீட்ட பிற பாஜக நிர்வாகிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

அவர் தற்போது சிகிச்சைக்கு பின் நலம்பெற்றுள்ள நிலையில், ஒருவிரல் புரட்சி செய்வதற்காக தனது விரலை துண்டித்ததாகவும், தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெறும், மோடி அலை வீசுகிறது எனவும் கூறினார்.