வாரிசு படத்தின் வசூலை கேலி செய்த ப்ளு சட்டை மாறன்.! விஜய் ரசிகர்களால் தாக்குதல்.?!
#Breaking | நிதியமைச்சர் காரின் மீது செருப்பு வீச்சு: பா.ஜனதா பெண் நிர்வாகி உட்பட 5 பேர் அதிரடி கைது..!
#Breaking | நிதியமைச்சர் காரின் மீது செருப்பு வீச்சு: பா.ஜனதா பெண் நிர்வாகி உட்பட 5 பேர் அதிரடி கைது..!

தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் இன்று காலை தனி விமானம் மூலம் அவரது உடல் ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் இன்று நண்பகல் 12.15 மணிக்கு மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.
ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித்சிங் கலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், மேயர் இந்திராணி, துணைமேயர் நாகராஜன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் ராணுவ உயர் அதிகாரி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து ராணுவ வாகனத்தில் லட்சுமணனின் உடல் டி.புதுப்பட்டி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் ஊர் திரும்பிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரர் மீது காலணி வீசப்பட்டது. மதுரை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜனதா கடியை சேர்ந்த பெண் நிர்வாகி உள்பட 5 பேரை கைது செய்த அவனியாபுரம் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.