ஜியோ நிறுவனத்தின் அதிரடி தீபாவளி ஆஃபர்! உச்சகட்ட குஷியில் பொதுமக்கள்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா டெக்னாலஜி

ஜியோ நிறுவனத்தின் அதிரடி தீபாவளி ஆஃபர்! உச்சகட்ட குஷியில் பொதுமக்கள்!


தொலைத்தொடர்பு துறையில் ஜியோ மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். பலவருடமாக ஆதிக்கம் செலுத்திவந்த பல்வேறு நிறுவனங்கள் ஜியோவின் வளர்ச்சியால் ஓரங்கட்டப்பட்டது. சில நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன.

மக்களுக்கு குறைந்த செலவில் அதிக இன்டர்நெட்டை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம்.  மாதம் இணையத்திற்காக மட்டுமே 1000 கணக்கில் செல்வது செய்த காலம் மாறி ஒருமுறை ரீஜார்ச் செய்தல் மூன்று மாதத்திற்கு அளவில்லாத இணையத்தை பயன்படுத்த முடியும் என்ற வசதியை மக்களுக்காக கொடுத்துள்ளது ஜியோ நிறுவனம்.

ஜியோவின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணம் ஜியோவின் இலவச சேவைதான் காரணம். ஆரம்பத்தில் அனைத்தையும் இலவசமாக வழங்கிய ஜியோ நிறுவனம் தற்போது பல்வேறு சேவைகளுக்கு குறைந்த கட்டணத்தையே வசூலித்து வருகிறது.

இந்தநிலையில் ஜியோ நிறுவனம், இந்தவருட தீபாவளி சலுகையை அறிவித்துள்ளது. அதாவது "JIOPHONE DIWALI 2019 OFFER "எனப்படும் சிறப்பு ஒரு முறை சலுகையை அறிவித்துள்ளது. இந்த பண்டிகை கால சலுகை விற்பனையின் கீழ், 2G திட்டத்திலிருந்து 4G திட்டத்திற்கு மாற விரும்பும் பயனர்களுக்கு, ஜியோ மொபைலை வெறும் ரூ.699 என்ற விலையில் வழங்கவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த போன் ரூ.1,500 என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் கடந்த ஜூலை 2017 இல் அறிமுகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மொபைலை வாங்கினால் ரூ.700 மதிப்புள்ள சலுகைகளும் கிடைக்கும் எனவும், வாடிக்கையாளர்கள் செய்யும் முதல் 7 ரீசார்ஜ்களுக்கு கூடுதலாக ரூ.99 மதிப்புள்ள டேட்டா பலன்கள் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo