பெண்வேடமிட்டு டிக்-டாக் ஆப்பில் வீடியோ வெளியிட்ட சென்னை இளைஞர் தற்கொலை; மனதை புண்படுத்திய கருத்துக்களால் அவமானத்தில் விபரீத முடிவு!

பெண்வேடமிட்டு டிக்-டாக் ஆப்பில் வீடியோ வெளியிட்ட சென்னை இளைஞர் தற்கொலை; மனதை புண்படுத்திய கருத்துக்களால் அவமானத்தில் விபரீத முடிவு!



young-man-suicided-because-of-video-in-tik-tak-app

டப்ஸ்மாஷ், மியூசிக்கலி (டிக்-டாக்) ஆப்களின் மூலம் வீடியோக்களை பதிவு செய்வது சமீபத்தில் வாடிக்கையாகி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமையை மற்றவர்களிடம் காட்டுவதற்காக இந்த முயற்சியை எடுத்து வருகின்றனர்.  

சிலர் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக மிகவும் வித்தியாசமான, விசித்திரமான வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அவ்வாறு பெண்வேடமிட்டு தான் பதிவு செய்த ஒரு வீடியோவால் சென்னை இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

young man suicided because of video in tik tak app

வட சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 24 வயதான கலையரசன் என்ற இளைஞர் அடிக்கடி டிக்-டாக் ஆப்பில் தனது வீடியோவை பதிவு செய்து வந்துள்ளார். அவர்கள் திறமையை பார்த்த அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பெண்களின் உடைகளை அணிந்து ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை கண்டு பலரும் அவரை அசிங்கப்படுத்தும் விதமாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். பெண் உடையில் அவரைப் பார்த்த சிலர் திருநங்கை போல் சித்தரித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

இதனால் அவமானம் அடைந்த அந்த இளைஞர் புதன்கிழமை அன்று ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

young man suicided because of video in tik tak app

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் "எனக்கு பிடித்த விஷயங்களை தான் நான் செய்ய முடியும். அடுத்தவர்களுக்காக நான் தலை குனிய தேவையில்லை. நான் ஆண் வேடத்தில் பல வீடியோக்களை பதிவு செய்துள்ளேன், அதை பற்றி யாரும் ஏன் பேசவில்லை. பெண் வேடமணிந்து வெளியிட்ட ஒரு வீடியோவை மட்டும் எல்லோரும் எதிர்த்துப் பேசுவது ஏன்?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனைப் பற்றி தகவல் தெரிவித்துள்ள காவல்துறையினர் கலையரசன் இறந்து கிடந்த இடத்தில் அவரது மொபைல் போன் காணவில்லை. மேலும் அவருடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்ற நோக்கத்தில் விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.