ரயில் தண்டவாளத்தில் இருக்கும் இரும்பு மட்டும் ஏன் துரு பிடிப்பதில்லை தெரியுமா?

ரயில் தண்டவாளத்தில் இருக்கும் இரும்பு மட்டும் ஏன் துரு பிடிப்பதில்லை தெரியுமா?


Why railway track not getting stain rust reason in tamil

மனிதர்களின் அன்றாட போக்குவரத்துக்கு சாதனங்களில் ஒன்றாக மாறிவிட்டது ரயில் போக்குவரத்து. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்லவும், வீடு திரும்பவும் ரயில் போக்குவரத்துக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.

ரயிலின் முக்கியத்துவம் பற்றி தெரிந்த நமக்கு அதில் இருக்கும் ஒருசில ரகசியங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் குறிப்பாக, ரயில் தண்டவாளங்கள் ஏன் துரு பிடிப்பதில்லை என்று நீங்கள் யோசித்தது உண்டா?

Train X Sympol

வருடம் முழுவதும் மழை, வெயிலில் கிடக்கும் இந்த ரயில் தண்டவாளங்கள் மட்டும் ஏன் துரு பிடிப்பதில்லை தெரியுமா? பொதுவாக மற்ற இடங்களில் பயன்படுத்தப்படும் இரும்பை விட ரயில் தண்டவாளத்தில் பயன்படுத்தப்படும் இரும்பு மிகவும் உறுதியானது, மேலும் அதிக தரம் வாய்ந்தது.

ரயில் தண்டவாளத்தின் மீது ரயில் சக்கரங்கள் உரசி செல்வதால்தான் தண்டவாளத்தில் இருக்கும் இரும்பு துரு பிடிப்பதில்லை. பக்கவாட்டில் இருக்கும் இரும்பின் மீது உராய்வு ஏற்படாவிட்டாலும் அதன் தரம் காரணமாக அந்த இரும்பும் துரு பிடிப்பதில்லை.