பிடித்த உணவை பார்த்தாலே எரிச்சல், கடுப்பு.. ஏன் வருகிறது தெரியுமா.?!
காலையில் குடிக்கும் டீ முதல், இரவு நாம் சாப்பிடும் உணவு வரை, நமது வாழ்க்கை முழுவதும் சுவையோடு இணைந்திருக்கிறது. சில உணவுகள் நமக்கு மிகவும் பிடித்தமானவையாகவும், மனதிற்கு நெருக்கமானவையாகவும் இருக்கும். ஆனால், சில நேரங்களில் ஆசையாக சாப்பிட்ட உணவை பார்த்தாலே அருவருப்பாக தோன்றும்.
இதற்கு முக்கிய காரணம் நமது மூளை மற்றும் உணர்வு மண்டலமே. ஒரு உணவின் வாசனை, நிறம் அல்லது சுவையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும், அதை மூளை “பாதுகாப்பு எச்சரிக்கை” போல எடுத்துக்கொள்கிறது. அதனால் திடீரென அந்த உணவின் மீது வெறுப்பு உருவாகலாம்.
அதேபோல், மற்றவர்களின் முகபாவனைகளும் நம்மை பாதிக்கும். யாராவது ஒரு உணவை பார்த்து முகம் சுளித்தால் அல்லது சமூக வலைதளங்களில் அசுத்தமான உணவு வீடியோக்களை பார்த்திருந்தால் கூட, அது நமது மனநிலையை மாற்றி அந்த உணவின் மீது அருவருப்பை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: "மனைவியின் அந்த பாகத்தை 2 நிமிடம் பார்த்தாலே ஆயுள் கூடுமா?" – வைரல் தகவலுக்கு ஆய்வாளர்கள் பதில்..!

அருவருப்பு என்பது உண்மையில் நம்மை பாதுகாக்கும் ஒரு இயல்பான உணர்வு. கெட்டுப்போன அல்லது உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை தவிர்க்கவே மூளை இவ்வாறு செயல்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு மற்றும் கர்ப்பகாலத்தில் இந்த உணர்வு அதிகமாக இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த வெறுப்பை குறைக்க, அந்த உணவை வேறு விதமாக சமைத்து பார்க்கலாம். அல்லது, பிடித்தமானவர்கள் சமைத்துக் கொடுத்தால் அல்லது புதிய சுவையில் முயற்சி செய்தால், பழைய வெறுப்பு மெல்ல குறைய வாய்ப்புள்ளது.
உணவின் மீது ஏற்படும் இந்த திடீர் மாற்றங்கள் பெரும்பாலும் தற்காலிகமானவைதான். நமது உடலும் மூளையும் நம்மை பாதுகாக்க எடுத்துக்கொள்ளும் ஒரு சாதாரண செயலாகவே இதை எடுத்து கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: தனியா சாப்பிடும் பழக்கம்.. நம்ம உயிரையே எடுக்கும்னு சொன்னா., நம்ப முடியுதா.?!