புகைப்பிடிப்பவரா நீங்கள்.? உயிர் போகும் அபாயம்.! உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட எச்சரிக்கை.!who-warning-to-smokers

புகைபிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலும் சுவாசத் தொற்று ஏற்பட்டு எளிதாக கொரோனா பரவக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும்போது கைக்கும், வாய்க்கும் இடையேயான தொடர்பு அதிகரிப்பதால் எளிதாக கொரோனா பரவக்கூடும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. 

உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா வைரஸ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் முகக் கவசம், சமூக விலகல் போன்ற பாதுகப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பது அவசியமாகும். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிகப்படியான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தநிலையில், உலக சுகாதார அமைப்பு கொரோனா தொற்று குறித்து எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களுக்கு 50% கூடுதலாக தீவிர கொரோனா தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும் என்பதால் அதில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தால் உயிரிழப்புக்கு வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புகைப்பழக்கத்தை நிறுத்துவது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை பலருக்கும் பகிர்ந்து உயிரிழப்புகளை தவிர்ப்போம்.