அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அதிகாலையில் எழுவதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா.?
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் தூக்கம் என்பது பலருக்கும் கிடைக்காத ஒரு விஷயமாக மாறிவிட்டது. தூக்கத்திற்காக பலரும் மருந்து மற்றும் மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொண்டு வருவதால் பல பக்க விளைவுகளும் உடலில் ஏற்படுகின்றன.

இவ்வாறான விஷயங்களை தவிர்ப்பதற்காக அதிகாலை தூங்கி எழ வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிகாலை எழுவதன் மூலம் அன்றைய நாளில் சுறுசுறுப்பாக இருக்கவும், இரவு சீக்கிரமாக தூங்கவும் உதவிகரமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

இவற்றையே வழக்கமாக செயல்படுத்துவதன் மூலம் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் இருந்து மீளலாம். அதிகாலை எழுவது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.