குட்மார்னிங் டிப்ஸ்: காலை நேரத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் தெரியுமா?

குட்மார்னிங் டிப்ஸ்: காலை நேரத்தில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் தெரியுமா?



What are the foods can eat for breakfast and health tips in tamil

பொதுவாக காலை உணவு நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நேரம் ஆகிவிட்டது, சாப்பாடு வேண்டாம் என்று அவசர அவசரமாக கிளம்பி செல்பவர்கள் நம்மில் ஏராளம். தயவு செய்து இனி அதை திருத்தி கொள்ளுங்கள். ஏனெனில் காலை உணவுதான் நமது உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது. மேலும் பலவிதமான நன்மைகள் காலை உணவின் மூலம்தான் நமக்கு கிடைக்கிறது.

சரி, இவளோ நன்மைகள் தரக்கூடிய காலை உணவில் எது போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம் என பார்க்கலாம் வாங்க.

தயிர்

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை இயற்கை முறையில் அதிகரிக்க உதவும். இதில் உள்ள கால்சியம் மற்றும் அமிலங்கள் குடல் ஆரோக்கியம், பசியை கட்டுப்படுத்துவுது, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Breakfast

ஓட்ஸ்

ஓட்ஸில் அதிக அளவு நார்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் பசியைத் தடுக்கிறது. இதில் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.  தயிர் அல்லது சிறிதளவு புரோட்டின் பவுடருடன் சேர்த்து சாப்பிடலாம்.

முட்டை

சிறப்பான வளர்ச்சிதை மாற்றத்திற்கு முட்டை அவசியம்

இதில் சரியான அளவில் புரோட்டின்கள், ஒமேகா 3 அமிலங்கள், வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலம் உள்ளன. காலை உணவில் முட்டை சேர்த்துக்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்பாடனும், இன்சுலின் அளவையும் சீராகவும் வைத்திருக்க உதவுகிறது.

காபி

அதிகளவு காபி குடிப்பது  சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட அளவிலான காபி குடிப்பது நன்மைகளை அளிக்கும். காபி கலோரிகளை எரிப்பதுடன் ஆரோக்கியத்தின் அளவை அதிகரிக்கும்.

Breakfast

பாலாடைக்கட்டி

புரோட்டின்களின் சுரங்கமான பாலாடைக்கட்டி பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும். பாலடைக்கட்டியுடன் சில தானியங்களை சேர்த்து சாப்பிடுவது மிகச்சிறந்த காலை உணவு.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச், கார்போஹைட்ரேட்டுகள் பசி ஏற்படாமல் நீண்ட நேரம் கட்டுப்படுத்தும். பொட்டாசியம் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை செல்களுக்கு கடத்த உதவுகிறது.