BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
40 வயதிலும் இளமையாக இருக்கணுமா.? இந்த சிம்பிள் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.!!
மனிதர்கள் அனைவருக்கும் வயதாகாமல் இளமையாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால் ஒவ்வொரு வருடமும் கழிய வயது கூடிக் கொண்டே செல்கிறது. சிலருக்கு 40 வயதிலும் முதியவர்கள் போன்ற தோற்றம் ஏற்படும். அதுபோன்று இல்லாமல் நாற்பது வயதிலும் இளமையாக இருப்பதற்கு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்.
வெந்நீர்: தினமும் காலையில் எழுந்து வெந்நீர் அருந்த வேண்டும். ஏனெனில் தினமும் காலையில் ஒரு கிளாஸ் நீரை குடிப்பதால் ரத்த ஓட்டம் மேம்படும் இதனால் முகம் பளபளப்பாகவும் இளமையாகவும் இருக்கும்.
ட்ரை நட்ஸ்: ஊற வைத்த உலர்ந்த பழங்கள் வால்நட், பாதாம், அத்திப்பழங்கள் ஆகியவற்றை தினமும் காலை மாலை உணவுக்கு முன்பு சாப்பிட வேண்டும்.
உடற்பயிற்சி: உங்களோட வேலை பளுவுக்கு தகுந்த மாதிரி உடற்பயிற்சி நீங்களே ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க வாக்கிங் ,யோகா, ஜிம், ஜும்பா டான்ஸ் இப்படி நிறைய உடற்பயிற்சி கூடங்கள் இருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி நீங்க உடற்பயிற்சி பண்ணிக்கோங்க டெய்லி ஒரு 25 நிமிஷம் உங்களுக்காக ஒதுக்குங்க .
காலை உணவு: புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள் காலை உணவு மிகவும் முக்கியமானது .