"ரவா உப்புமா பிடிக்காதா? அப்போ சிறுதானிய உப்புமா ட்ரை பண்ணுங்க!"

"ரவா உப்புமா பிடிக்காதா? அப்போ சிறுதானிய உப்புமா ட்ரை பண்ணுங்க!"



Varieties of uppuma recipies

தமிழர்களின் காலை எளிய உணவுகளில் உப்புமாவும் ஒன்று. இதை தயாரிப்பது எளிதானதும் கூட. பெரும்பாலும் ரவையை வைத்து தயாரிக்கப்படும் உப்புமாவைத் தவிர, சில சத்தான சிறுதானிய உப்புமா வகைகளை இங்கு பார்ப்போம். 

Uppuma

சோள உப்புமா: இதில் ரவைக்கு பதிலாக சோளம் சேர்க்கப்படுகிறது. மேலும் இதில் வெங்காயம், பட்டாணி, கேரட் ஆகியவற்றை சேர்ப்பதால் ஆரோக்கியமானதும் கூட. இதில் நார்ச்சத்த்து நிறைந்துள்ளதால் எளிதில் செரிமானமாகும். உடல் எடையும் குறையும்.

ராகி உப்புமா: இதற்கு தேங்காய்ப்பாலில் ராகிமாவை பிசைந்து புட்டு போல் உப்புமாவை தயாரிக்கலாம். பாசிப்பருப்பு உப்புமா: இது அதிக புரதச்சத்து நிறைந்தது. முதலில் பாசிப்பருப்பு இட்லி தயாரித்து, பின் அதை உதிர்த்து உப்புமாவாக செய்யலாம். 

Uppuma

சோயாபீன் உப்புமா: சோயாபீனில் கீமா தயாரித்து, பின் அதை உதிர்த்து சோயாபீன் உப்புமா தயாரிக்கலாம். குயினோவா உப்புமா: இதிலும் ரவைக்கு பதிலாக குயினோவாவை சேர்க்க வேண்டும். மற்ற செய்முறை அனைத்தும் ரவா உப்புமாவிற்கு செய்வது போல் தான்.