உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் டாப் 3 ஆண்ட்ராய்டு ஆப்கள்!

உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் டாப் 3 ஆண்ட்ராய்டு ஆப்கள்!


top-three-useful-apps-for-android-users

தொழிநுட்ப வளர்ச்சிக்கேற்ப தொழிநுட்பம் மீதான மக்களின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதில் முக்கியமான ஓன்று தொலைபேசி. சிறுவர்கள் தொடங்கி, பெரியவர்கள் வரை இன்று அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

தொலைபேசியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது இன்டர்நெட். அந்த இன்டர்நெட் மூலம் நமது தொலைபேசியில் தேவை இல்லாத மொபையில் ஆப்களை பதிவிறக்கம் செய்வதும் சில சமயங்களில் அதுவே நமக்கு தலைவலியாக மாறுவதும் வழக்கமான ஓன்று.

ஆனால் நமது அன்றாட தேவைகளுக்கு பயன்பட கூடிய சிலவிதமான மொபைல் ஆப்கள் மற்றும் இணையதளங்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நமது அன்றாட வாழ்விற்கு தேவையான சில மொபைல் ஆப் மற்றும் இணையதளங்கள் பற்றித்தான் இங்கே பார்க்க உள்ளோம்.

1 . ServiceTree 
பொதுவாக போன், அல்லது சிறு சிறு பொருட்கள் பழுதாகிவிட்டால் எளிதாக அதை கடைக்கு எடுத்து சென்று பழுப்பார்த்து விடுவோம். அதுவே டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர் போன்றவை பழுதாகிவிட்டால் அதனை கடைக்கு தூக்கி செல்வது கடினம். இதுபோன்ற சிக்கல்களை எளிதாக்குகிறது ServiceTree App . இந்த App மூலம் உங்கள் தேவையை கூறினால் ஆட்களே நேரடியாக உங்கள் வீட்டிற்கு வந்து பழுதான பொருட்களை சரி செய்து தருவார்கள். மேலும் சரி செய்த பொருட்களுக்கு 30 நாட்கள் வாரன்டியும் வழங்கப்படுகிறது.

ServiceTree ஆப்பை டவுன்லோட் செய்ய: https://www.servicetree.in/  அல்லது Call : 08144948948

Service tree

2 . Dooly 
நம்மில் பலரும் பஸ்ஸோர்ட், Pan card , GST போன்றவற்றை வாங்க ப்ரோக்கர்களிடம் அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாந்திருப்போம். Dooly என்ற இணையதளம் உங்கள் தேவையை எளிதாக்குகிறது. வீட்டில் இருந்தபடியே உங்களுக்கு தேவையான அணைத்து சான்றிதழ்களையும் Dooly என்ற இணையதளம் மூலம் பெற முடியும்.

இணையதள முகவரி: https://www.dooly.in/

Service tree

3 . Go Bumper 
இன்று கார், பைக் இல்லாத வீடுகளே இல்லை. அணைத்து வீடுகளிலும் கார், பைக் அத்யாவசிய பொருளாக மாறிவிட்டது. பொதுவாக வாகனத்தில் பயணம் செய்யும்போது திடீரென நமது வாகனம் பழுதாக்கலாம், பெட்ரோல் அல்லது டீசல் இல்லாமல் போகலாம், பஞ்சர் ஆகலாம். இதுபோன்ற உடனடி தேவைகளை பூர்த்தி செய்கிறது Go Bumper . இந்த App மூலம் உங்க இடத்தை தெரிவித்தால் அவர்களே உங்கள் இடத்திற்கு வந்து உங்கள் வாகனத்தை சரிசெய்து தருவார்கள்.