லைப் ஸ்டைல் ஆன்மிகம்

வீட்டில் செல்வம் பெறுக காலை எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Summary:

Tips to earn more money and peaceful life

வீட்டில் வீட்டில் செல்வம், அமைதி, நிம்மதி நிறைந்திருக்க யாருக்குத்தான் பிடிக்காது. இவை அனைத்தும் உங்கள் வீட்டிலும் நிறைந்திருக்க என்னெல்லாம் செய்யவேண்டும் என்று பார்க்கலாம் வாங்க.


1) பொதுவாக ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் காலையில யார் முகத்தில முழுச்சனுதான் கேட்பார்கள். அதற்கு பலவித அர்த்தங்கள் உண்டு. வீட்டில் செல்வம் பெறுக காலை எழுந்தவுடன் லக்ஷ்மி தேவியின் படம், உங்களது உள்ளங்கை, கோவில் கோபுரம், கண்ணாடி, மனைவி அல்லது உங்கள் குழந்தை போன்றவற்றில் தான் கண் விழிக்க வேண்டும்.

2) தினமும் காலை பொழுதில் உங்களை சுற்றி அதிகப்படியான பாசிட்டிவ் அலைகள் அதிகம் இருக்கும். எனவே அதிகாலை எழுந்தவுடன் நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து கடவுளை வணங்க வேண்டும்.

3) கடவுளின் மந்திரங்கள் சொல்லி வழிபடுவது மேலும் நன்மை பயக்கும். கடவுளின் மந்திரம் சொல்லும் போது பூ மற்றும் ருத்ராட்சம் கையில் வைத்து கொண்டு சொல்வது நல்லது.

4) மேலும் நாம் செய்யும் செயல்களுக்கும் திசைகளுக்கும் பலவிதங்களில் தொடர்பு உண்டு. எனவே கடவுளை வணங்கும்பொழுது கிழக்கு திசையில் பார்த்துதான் வணங்க வேண்டும்.


5) பெரும்பாலும் விளக்கு ஏற்ற பசும் நெய் பயன்படுத்துவது நல்லது. இல்லை எனில் நல்ல எண்ணெய் மற்றும் 5 எண்ணெய் கலவையை கொண்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

இவற்றை பின்பற்றி வந்தால் வீட்டில் நிச்சயம் செல்வ வளம் பெருகும்.


Advertisement