வீட்டில் பணக்கஷ்டம் தாண்டவமாடுதா?.. திருஷ்டியை கழிக்க இப்படி செய்யுங்கள்.! இதோ உங்களுக்கான அசத்தல் டிப்ஸ்.!!Tips to Avoid Eye Thirusti Problem 

 

நமது அன்றாட சமையலுக்கு பயன்படும் மிளகாய் வீட்டுப் பிரச்சினை தீர்க்கும். பச்சை மிளகாய் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. அது மட்டுமல்லாது, ஜோதிட ரீதியாக பச்சை மிளகாய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

கண் திருஷ்டியை நீக்க, தோஷங்களை நீக்கவும் வீட்டு வாசலில் பச்சை மிளகாய் கட்டி தொங்கவிடப்படுகிறது. புதன் கிரகத்தை குறிக்கும் பச்சை மிளகாய், கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தும். 

கண் திருஷ்டியை சரி செய்ய 7 பச்சை மிளகாயை கண் திருஷ்டிபட்ட நபரின் தலையில் ஏழு முறை தலைகீழாகவும் நேராகவும் சுற்றி சாலையின் ஓரத்தில் வீசி விட வேண்டும். 

Latest news

வீட்டில் பணப் பிரச்சனை தீர 3 பச்சை மிளகாயை எப்போதும் நமது பர்சில் வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் காய்ந்ததும் அதனை மாற்றி வைத்து உபயோகம் செய்ய வேண்டும். 

வாஸ்து குறைபாடு சரி செய்ய தினமும் கிளாஸ் ஒன்றில் பச்சை மிளகாயை போட்டு வைக்க வேண்டும். ஆரோக்கியத்தில் பிரச்சினை இருந்தால் தலையணை அடியில் ஐந்து பச்சை மிளகாய் வைத்து உறங்கலாம்.