லைப் ஸ்டைல் சமூகம் 18 Plus

இதை செய்தாலே போதும்..! உங்கள் காதலியை எளிதாக மயக்க, நீங்கள் செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இதோ.!

Summary:

Tips for attract a girl at first meet

எப்போதுமே முதல் சந்திப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. முதல் சந்திப்பிழையே நாம் நடந்துகொள்ளும் விதம், நமது செயல்பாடுகள்தான் முதல் சந்திப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது. அதிலும் காதலர்கள், அல்லது காதலை வெளிப்படுத்த காத்திருக்கும் ஆண்களுக்கு இதுவும் முக்கியமான ஒன்று.

பொதுவாக ஆண்கள் பெண்களிடம் பார்க்கும் சிறு சிறு விஷயங்களை கூட உடனே மறந்துவிடுவார்கள். உதாரணத்திற்கு முதல் சந்திப்பின்போது பெண் அணிந்திருந்த உடை, உடையின் வண்ணம் போன்றவற்றை கூறலாம். ஆனால் பெண்கள் அப்படி இல்லை, நீண்ட நாட்கள் ஆனாலும் அவர்களுக்கு பிடித்த ஆண்களிடம் அவர்கள் முதன் முதலில் பார்க்கும் விஷயங்களை நீண்ட நாட்களுக்கு கூட நினைவில் வைத்திருப்பார்கள்.

சரி, ஒரு பெண் ஒரு ஆணை முதலில் பார்க்கும் போது எவற்றையெல்லாம் முதலில் பார்க்கிறார் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

முகம்:

ஒரு பெண் முதலில் ஒரு ஆணின் முக்கத்தைத்தான் பார்ப்பாராம். எனவே புதிதாக ஒரு பெண்ணை பார்க்கும் பொது சிரித்த முகத்துடன் அழகாக வரவேற்பது உங்கள் மீதான மதிப்பை மேலும் உயர்த்தும்.

சிரிப்பு:
ஒரு பெண்ணிடம் பேசும் போது சிரிப்பு மிகவும் அவசியம். அவர் கூறும் நகைச்சுவை மொக்கையா இருந்தாலும் கூட கண்டிப்பா சிரிங்க. அதேநேரம் ஓவரா சிறுச்சு மாடிக்காதிங்க. எதை செஞ்சாலும் அளவா செய்யுங்க.

உங்கள் தோற்றம்:
ஒருவரின் தோற்றம் மிகவும் முக்கியமானது, ஒரு பெண்ணை பார்த்து பேசும் போது, நன்றாக நிமிர்ந்து நின்று பேசுங்கள். இவ்வாறு நீங்கள் பேசும்போது நீங்கள் அதிக நம்பிக்கை உடைய ஒருவராக அவர்களுக்கு தோன்றுவீர்கள். இது மேலும் உங்களை அழகாக காட்டும்.

தோள்பட்டைகள்:

ஆம் ஒரு பெண் ஒரு ஆணை பார்க்கும் போது அவனது தோள்பட்டைகள் எவ்வளவு வலிமையாக இருக்கிறது என்று பார்க்கிறாராம். எனவே ஒர்கவுட் செஞ்சு நல்லவலிமையா வச்சுக்கோங்க.

உங்கள் தலை முடி:

ஒரு பெண் அடுத்ததாக ஒரு ஆணிடம் பார்ப்பது அவனது தலை முடியாம். எனவே நல்ல ஹேர் ஸ்டைல் செலக்ட் பண்ணி உங்கள பாக்குற பெண்ணை கவருங்கள்.

சகஜமாக பழகுதல்:

ஒரு ஆண் தனது நண்பர்களுடன் எவரோ பேசுகிறான், அவர்களுடன் எவ்வாறு பழகுகிறான் என்பதையும் பெண்கள்பார்க்கிறார்களாம். எனவும் அதிலும் கவனமுடன் இருங்கள்.


Advertisement