வீட்டில் பிரிட்ஜ் பயன்படுத்துவரா நீங்கள்; அப்போ கட்டாயம் நீங்கள் படிக்க வேண்டும்

வீட்டில் பிரிட்ஜ் பயன்படுத்துவரா நீங்கள்; அப்போ கட்டாயம் நீங்கள் படிக்க வேண்டும்


things-that-can-be-kept-in-fridge

இன்றைய நவீன உலகில், அனைவரின் வீட்டிலும், பிரிட்ஜ் வந்துவிட்டது. சின்ன சின்ன கிராமங்களில் கூட மக்கள் பிரிட்ஜ் பயன்படுத்த துவங்கி விட்டனர். 

ஆனால் பிரிட்சில் என்னென்ன பொருட்கள் வைக்கலாம் என்ற விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளன. எனவே பிரிட்சில் எந்த மாதிரியான பொருட்களை வைத்து பயன்படுத்தலாம் என்று இங்கே பாப்போம்.

refrigenator

# இறைச்சி: அதிகக் குளிரான சூழலில், மிக அதிகமான நேரம் எந்த உணவை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும், உணவு அதன் தன்மையை இழந்துவிடும். குறிப்பாக, இறைச்சி வகைகள். சமைக்கப்படாத இறைச்சித் துண்டுகளை, ஓரிரு நாள்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். சமைத்த இறைச்சியை மூன்று நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் உணவின் இயல்பான தன்மை போய்விடும். வெளியே எடுக்கும்போது, கறியின் மேற்பரப்பு கடினமாக மாறியிருக்கும். அதைச் சூடுபடுத்திய பின்னரே, உபயோகப்படுத்த வேண்டும். இறைச்சியில் பாக்டீரியா வளர்வது அதிகமாக இருக்கும். எனவே, தனித் தனி அறைகள் கொண்ட ஃப்ரிட்ஜை இறைச்சியை வைக்கப்பயன்படுத்த வேண்டும்.

# சீஸ்: சீஸ் கெடாமல் இருக்க வேண்டுமென்றால், அதற்குக் கண்டிப்பாக ஃப்ரிட்ஜ் தேவை. சீஸை ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும்போது பிளாஸ்டிக் பையில் சுற்றி, காற்றே புகாமல் அடைத்துவைப்பார்கள் சிலர். அதைவிட கன்டெய்னர், சின்னச் சின்ன பெட்டிகளில் லேசான காற்றோட்டம் இருப்பதுபோல வைத்திருப்பது அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.

# பால்: பாலை வாங்கி சில மணி நேரங்களில் உபயோகித்து விடுவது நல்லது. அதிகபட்சம் ஒரு நாள் வரை பாதுகாத்து வைக்கலாம். அதற்கு மேலும் வைத்திருந்து பயன்படுத்த நினைப்பவர்கள், ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஆனாலும் ஓரிரு தினங்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

# உலர் பழங்கள்: உலர் திராட்சை, பேரீச்சம் பழம், அத்திப்பழம், பாதாம் போன்ற உலர் பழங்களின் ஆயுட்காலம் மாதக்கணக்கில் இருக்கும். இவற்றை எந்தச் சூழலில் சேமித்துவைத்தாலும், குறிப்பிட்ட காலம் வரை கெடாமல் அப்படியே இருக்கும். அவற்றை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க விரும்புபவர்கள், ஃப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கலாம்.

refrigenator

# வெண்ணெய்: அதிகக் கொழுப்புச்சத்து, குறைவான நீர்ச்சத்துக் கொண்டது வெண்ணெய். வெளிச்சம் அதிகம்படும் இடத்திலோ, காற்றோட்டமான இடத்திலோ வெண்ணெயை வைத்திருந்தால் ஓரிரு நாள்களில் கெட்டுப்போய்விடும். எனவே, அதிக நாள் வைத்திருந்து வெண்ணெயைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.

# தயிர்: இது, உறைவதற்கு, இரண்டு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொள்ளும். உறையும் வரை, தயிரை வெளியில் வைத்திருப்பதுதான் நல்லது. அதிக வெப்பநிலையில் தயிரை வெகுநேரத்துக்கு வைத்திருந்தால், அது திரிந்துபோய்விடும். எனவே, உறைந்ததும் ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். எவ்வளவு விரைவாகப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நல்லது.

# மருந்து, மாத்திரைகள்: ஒவ்வொரு மாத்திரையிலும் சிரப்பிலும் எந்த வெப்பநிலையில் அதை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இன்சுலின் போன்ற மருந்துகளை, குளிர்ச்சியான நிலையில்தான் வைத்திருக்க வேண்டும். அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்திருக்கலாம்.

# கொத்தமல்லி, கறிவேப்பிலை: இரண்டையும் சுத்தப்படுத்தி, காகிதத்தில் சுற்றி, சிறிது மஞ்சள்வைத்து கட்டிவிட வேண்டும். அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால், ஒரு வாரத்துக்கும் மேல் கெடாமல் இருக்கும்.

# ஸ்ப்ரிங் ஆனியன்: வெங்காய வகைகளிலேயே, இது அதிக ஈரப்பதம் கொண்டது. எனவே, இதை இரண்டு நாள்களுக்கு மேல் வெளியில் வைத்திருக்கக் கூடாது. ஒன்றாகச் சேர்த்துக் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால், சில வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

# கீரைகள்: கறிவேப்பிலை, கொத்தமல்லியைப்போலவேதான் கீரைகளும். பல வீடுகளில் ஒரு கட்டுக் கீரையை அப்படியே பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாதிப் பாதியாகப் பயன்படுத்துவார்கள். சில நாள்கள் கழித்து கீரையைச் சமைத்தால், பாக்டீரியா பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. அதைத் தடுக்க ஃப்ரிட்ஜ் உதவும். மீதமான கீரைகளைச் சுத்தப்படுத்தி, ஒரு காகிதத்தில் சுற்றி, அதில் மஞ்சள் ஒன்றைப் போட்டுவைத்தல் கீரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். கீரையையும் இரண்டு நாள்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.

# எலுமிச்சை, ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்களை குளிர்ந்த, இருண்ட இடத்தில் வைத்திருந்தால், அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும். எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற அனைத்தையுமே அப்படிவைத்திருக்கலாம். எலுமிச்சையை இறுகக் கட்டாமல், லேசானக் காற்றோட்டத்தில் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அதேபோல, சமைப்பதற்கு ஓரிரு மணி நேரத்துக்கு முன்னர் அதை வெளியில் எடுத்துவைத்துவிடவேண்டியது அவசியம்.

# கேரட்: கேரட்டை அறையின் வெப்பநிலையில் வெளியில் வைத்திருந்தால் சில தினங்களில் கெட்டுப்போக வாய்ப்புண்டு. ஆனால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால், விரைவில் கெடாமல் பாதுகாக்கலாம். கேரட்டை முதல் ஓரிரு நாள்களுக்குக் காற்றோட்டமாக, வெளியில் வைத்திருக்க வேண்டும். பிறகு ஃபிரிட்ஜில் வைக்கலாம்.