
Thats a lot of snakes in one hole viral video
ஒரே குழிக்குள் இருந்து நிறைய பாம்புகள் வெளியே எட்டி பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
பொதுவாக பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷமும், அது கடித்தல் உயிரே போய்விடும் என்ற அச்சமும்தான் காரணம். அப்படி இருக்க ஒரு பாம்பாம்பை பார்த்தாலே இந்தநிலை என்றால் அப்போ ஒரு பாம்பு கூட்டத்தையே பார்த்தால் சொல்லவா வேண்டும்.
வைரல்ஹாக் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் குழிக்குள் இருந்து சுமார் 15 க்கும் மேற்பட்ட பாம்புகள் ஒன்றுபோல் தலையை தூக்கி வெளியே எட்டிப்பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. லாக்டவுன் காரணமாக பாம்புகளும் அதன் வீட்டிர்க்குள்ளையே உள்ளதுபோல என அந்த பதிவிற்கு தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு சற்று பயமாக இருக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.
Advertisement
Advertisement