உடலுக்கு தீங்கை ஏற்படுத்துவது காபியா? டீயா?..! நீச்சத்தண்ணீர் தான் பெஸ்ட்.!

உடலுக்கு தீங்கை ஏற்படுத்துவது காபியா? டீயா?..! நீச்சத்தண்ணீர் தான் பெஸ்ட்.!


Tea and Coffee is Dangerous to Health

ஒவ்வொரு நாளும் பலருக்கும் டீ, காபியுடன் தான் அன்றைய பொழுதே விடிகிறது. வெளியூர்களில் வேலைபார்த்து வரும் பலரும் அதனையே உணவாக எண்ணி வேறு வழியின்றி குடித்து வருகின்றனர். காலையில் எழுந்தவுடன் குடிக்க ஆரம்பித்தால், 11 மணி, 1 மணி, 3 மணி, இரவு 7 மணி என நாளொன்றுக்கு குறைந்தது 4 முதல் அதிகபட்சம் 10 வரை செல்கிறது. 

டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாள் முழுவதும் பலரும் தலை வலியுடன் இருப்பார்கள். காபியாக குடித்து பழகியவர்களுக்கு சொல்ல வேண்டாம். அதே நிலை தான். இவ்வாறு கட்டுப்பாடு இல்லாமல் நாளொன்றுக்கு ஏராளமான டீ, காபி குடிப்பது நல்லதா? என்பது குறித்து காண்போம். 

Tea

நாம் டீ குடிக்க முக்கிய காரணமாக இருப்பது, முன்னாளில் நாம் குடித்து காபி மற்றும் டீ போன்றவை நமது நரம்பு மண்டலத்தை தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருளை கொண்டுள்ளது. இதனால் டீ, காபி குடிப்பவர்களுக்கு சிறிது உற்சாகம் ஏற்படும். காபியில் உள்ள காபீன் என்ற வேதிப்பொருள், ஒருவிதமான மயக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அதனை தொடர்ந்து குடிக்க வைக்கிறது. இதுவும் ஒருவித போதையே. 

நாளொன்றுக்கு இரண்டு முறை டீ, காபி குடித்தால் உடலுக்கு பெரியளவில் பிரச்சனை ஏற்படாது. கட்டுப்பாடு இல்லாமல் டீ, காபி குடித்து வந்தால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம் வாதம் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனையும் ஏற்படும். மூளையில் உள்ள நரம்பில் இருக்கும் அடினோசின் ஆதிக்கத்தை காபீன் குறைத்து மன அழுத்தம் குறைகிறது. தொடர்ச்சியாக 10 வருடம் சரியாய் அளவில் டீ குடித்து வந்தால், அவரின் எலும்பு பிறரின் எலும்பை விட உறுதியாக இருக்கும். 

Tea

ஆனால், காபியில் உள்ள காபீன் தனது அளவை தாண்டும் போது இரத்தத்தில் இருக்கும் இரும்பு சத்தின் அளவை குறைத்து, இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் பதற்றம் போன்றவை ஏற்படும். இதுவும் ஒருவகை நோய்தான். எதுவும் அளவோடு இருந்தால் பிரச்சனை இல்லை. டீயோ, காபியோ அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. 

நாம் காபி, டீ குடித்து பழகிவிட்டதால் அவற்றை தவிர்க்க இயலாமல் தவித்து வருவது தொடர்கதையாகியுள்ளது என்பதே நிதர்சனம். நமது குழந்தைகளுக்காவது இயற்கையான பழச்சாறுகளையும், அதில் உள்ள நன்மையையும் பயிற்றுவித்து, அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்க முயற்சி எடுக்கலாம். காலையில் எழுந்தவுடன் நீச்சத்தண்ணீர் குடிக்கலாம். அதுவே உடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.