லைப் ஸ்டைல் காதல் – உறவுகள்

காதலித்து வீட்டைவிட்டு ஓடி வரும் எல்லோரும் சந்தோசமாக இருப்பதாக நினைக்கறீர்களா? இதை படித்து பாருங்கள் உண்மை பரியும்!

Summary:

suffers after love marriage

இன்று காதல் என்பது மிகவும் சகஜமான விசயமாகிவிட்டது. பள்ளி பருவத்திலிருந்தே மாணவ மாணவிகள் காதலிக்க துவங்கிவிடுகின்றனர். காதல் மட்டும் தான் வாழ்க்கை, காதலில் வென்றுவிட்டால் இந்த உலகையே வென்றுவிடலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். 

எதிர்காலத்தை பற்றி சிந்திக்காத சில ஜோடிகள் எப்படியும் வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் வீட்டைவிட்டு ஓடிவந்து திருமணம் செய்துகொள்கின்றனர். 

love marriage க்கான பட முடிவு

அந்த சமயத்தில் அவர்கள் காதலில் ஜெயித்துவிட்டோம் என்று மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அந்த மகிழ்ச்சியான வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நிலைப்பதில்லை. பல ஜோடிகள் நம் கண்முன்னே கஷ்டப்படுவதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். 

அவமானம்:
இவர்களின் இந்த செயலால் முதலில் அவமானப்படுவது அவர்களின் குடும்பத்தினர் தான். அவர்களால் முன்னர் போல் பொது இடங்களுக்கு செல்ல முடியாது. ஊர்க்கார்கள் பேசும் அவமானப் பேச்சுக்களால் கூனி குருகி வீட்டிற்குள்ளே அடைந்துவிடுகின்றனர். 

தொடர்புடைய படம்

வறுமை:
காதலிக்கும் போது பெற்றோரின் பணத்தில் நல்ல வசதியாக செலவு செய்ய பலர் பழகிவிடுகின்றனர். ஆனால் குடும்பத்தைவிட்டு பிரிந்த பிறகு சாப்பாட்டு செலவிற்கு கூட பணம் இல்லாமல் பல ஜோடிகள் அவதிப்படுகின்றனர். இந்த வறுமையை காரணம் காட்டியே பல ஜோடிகள் பிரிந்துவிடும் அவலம் உண்டாகிறது. 

தொடர்புடைய படம்

தனிமை:
ஆரம்பத்தில் பல ஜோடிகளுக்கு அவர்களின் நண்பர்கள் துணையாய் இருக்கின்றனர். ஆனால் அதுவும் சில காலம் தான். அதன் பின்னர் தனிமை தான். அதிலும் கொடுமை கணவர் வேலைக்கு சென்றபின்பு மணைவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பது. இந்த தனிமை அவர்களை வேறு ஒருவருடன் பழகுவதற்கும், விசித்திரமான செயல்களில் ஈடுபடுவதற்கும் வழிவகை செய்கிறது. 

தொடர்புடைய படம்

சந்தேகம்:
ஒரு கட்டத்தில் சிறு வயதில் இருந்தே வளர்த்த குடும்பத்தினரை பிரிந்து வர முடிந்த அவனுக்கோ, அவளுக்கோ நம்மைவிட்டு பிரிந்து செல்ல எவ்வளவு காலம் ஆகும் என்ற சந்தேகம் மனதில் தோன்றும். வீட்டிற்கு தெரியாமல் நம்முடன் ஊர் சுற்றிய அவனோ அவளோ இன்று யாருடன் சுற்றுகிறார் என்ற சந்தேகமும் ஒரு கட்டத்தில் வந்துவிடுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளால் பலர் பிரிந்துவிடுகின்றனர்.

parents suffering after daughter getting love marriage க்கான பட முடிவு

வெறுப்பு:
காதலிக்கும் பொது அனைவரும் மற்றவரை பற்றி முழுவதுமாக தெரிந்துகொள்வதில்லை. பலர் காதலிக்கும் பொது தனக்கு இருக்கு கேட்ட பழக்கங்களை பற்றி வெளியில் சொல்லாமல் மறைத்துவிடுகின்றனர். ஆனால் சேர்ந்து வாழும் பொது உண்மை முகம் வெளியில் வர ஆரம்பிக்கும். இதனால் இருவருக்கும் இடையே சில சமயங்களில் வெறுப்பு உண்டாகி வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போகும் வாய்ப்பு உண்டாகிறது.

தொடர்புடைய படம்

குழந்தை:
இவர்களுக்கு பிறகும் குழந்தைகள் தன் குடும்ப உறவுகள் இல்லாமல் வளர்க்கின்றனர். இதனால் சமுதயத்தில் அவர்கள் தனியாக தெரிகின்றனர். மேலும் பலர் குழந்தைகளை பெற்றுவிட்டு துணைக்கு ஆள் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதை நாம் பார்க்க முடியும். ஒரு சிலர் கவனிக்க ஆள் இருக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளவும் அச்சப்படுகின்றனர்.

parents suffering after daughter getting love marriage க்கான பட முடிவு

இப்படி பல இன்னல்களை சந்திப்பதால் உங்களை காதலிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள் என்று தான் கூறிக்கொள்கிறேன்.


Advertisement