உங்கள் அழகுக்கு ஆப்பு வைக்கும் இந்த செயலை இன்றே நிறுத்துங்கள்.!



stop 7 bad habits that damage your young look

சில பழக்கங்கள் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதை தாண்டி நம் அழகை முற்றிலுமாக சீர்குலைத்து, வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். எந்தெந்த பழக்கங்கள் அப்படி நம் அழகை கெடுக்கின்றன என்பது பற்றி பார்க்கலாம். 

உடலுக்கு தேவையான தூக்கம் கிடைக்கவில்லை என்றால், நமது தோல் பொலிவை இழக்கும். கண்களை சுற்றி கருவளையம் உருவாகும். 

உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்காமல் உடல் வறட்சி அடைந்தால் தோல் வறண்டு சுருக்கங்கள் ஏற்படும். இது நமக்கு வயதான தோற்றத்தை கொடுக்கும்.

இதையும் படிங்க: அன்றாடம் ஏசி பயன்படுத்துபவர்களுக்கு அதிர்ச்சி.! இவ்வளவு ஆபத்துகளா.?! 

bad habots

சன் ஸ்கிரீன் பயன்படுத்தாமல் சூரிய ஒளியில் அதிக நேரம் இருந்தால், நமது தோலினை இது சேதத்தை ஏற்படுத்தி வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. 

மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் தோல் செல்களை சேதப்படுத்துகின்றன. இதனால், உடலில் கருமை ஏற்படுவதுடன் சுருக்கங்களும் ஏற்பட்டு விரைவில் வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். 

தொடர்ந்து, மன அழுத்தத்தில் இருந்தால் நமது ஹார்மோன் சீர்குலையும். இதன் காரணமாக, சீக்கிரம் தோல் வயதானது போல மாறிவிடும்.

bad habots

தவறான உணவு பழக்க வழக்கங்களினால் தோல் பாதிக்கப்படும். அதிக சர்க்கரை கொண்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட் போன்றவற்றால் உடலின் இளமை பாதிக்கப்படும்.

முகம் மற்றும் உடலை சரிவர பராமரிக்காமல் இருப்பது போற்றத்தின் பொலிவை பெருமளவில் பாதிக்கும். எனவே, இளம் வயதிலேயே வயதானதைப் போல காணப்படுவீர்கள்.

இதையும் படிங்க: உங்கள் வயதுக்கு ஒரு நாளுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கனும் தெரியுமா.?!