தண்டுக் கீரையின் தனித்துவ நற்பண்புகள்.! சிறுநீரகம், கல்லீரலுக்கு நல்லது.!

தண்டுக் கீரையின் தனித்துவ நற்பண்புகள்.! சிறுநீரகம், கல்லீரலுக்கு நல்லது.!



stem-lettuce-benefits-for-kidney-stone-and-liver

முளைக்கீரை சற்று வளர்ந்து பெரிதானதும் தண்டுக்கீரை என்கிறோம். தண்டுக்கீரையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று பச்சை நிறத்திலும், மற்றொன்று சிவப்பு நிறத்திலும் இருக்கும். தண்டு கீரையை தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சரியான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் பல அதிசயங்கள் நிகழ்வது உறுதி. அப்படிப்பட்ட தண்டுக் கீரையின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தக் கீரையைக் கல்லீரல் பாதிப்புடையவர்கள் முறையான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பலம் பெறும். சிறுநீரில் கற்கள் உள்ளவர்கள் தண்டிக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் வழியாக கற்கள் வெளியேறும். மேலும் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களையும் இதன் மூலம் வெளியேற்றுகிறது. 

Stem lettuceஅனைத்து வகையான கீரைகளும் நன்மை தரக்கூடியது என்றாலும், ஒவ்வொரு வகை கீரையிலும் ஒவ்வொரு விதமான நன்மைகள் அடங்கியுள்ளது. இதில் தண்டுக்கீரை பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கு தீர்வளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தக் கீரையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது பெண்கள் எடுத்துக் கொண்டால் கருப்பை பலம் அடைந்து, அதில் உள்ள நச்சுக்களும் வெளியேறுகிறது. இந்தக் கீரையை கருத்தரிக்க விரும்பும் பெண்கள் சாப்பிட்டால் விரைவில் கருத்தரிக்க உதவும். 

இதேபோல் ஆண்கள் தண்டுக்கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் அவர்களின் மலட்டுத்தன்மை நீங்கி, உடலில் ஓடும் நரம்புகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்துகிறது. கல்லீரலில் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதற்கு தண்டுக்கீரை அதிக அளவில் நம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மூலநோய் உள்ளவர்கள் இந்தக் கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமடையும். 

Stem lettuceதண்டுக்கீரையிலும் நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரி செய்கிறது. தண்டுக்கீரையில் உள்ள சத்துக்கள் நம் இரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடி, நம் உடலை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.