முட்டைகள் கெட்டுப் போகாமல் வைத்திருப்பதற்கு இதோ சில எளிய வழிமுறைகள்.!some-simple-tips-to-keep-eggs-from-spoiling

பலர் நாள்தோறும் முட்டை வாங்கி வந்து சமைப்பார்கள். பல்வேறு பொருட்களை ஒட்டுமொத்தமாக வாங்கி வந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வார்கள். இது  அனைவரின் வீட்டிலும் நடக்கும் ஒரு அன்றாட நிகழ்வாகவே மாறிவிட்டது.

சிலர் அதிகளவிலான முட்டைகளை வாங்கிக் கொண்டு வந்து, தங்களுடைய சமையலறையில் வைத்து விடுவார்கள்.

health tipsஇந்த முட்டை எந்த விதமான பாதுகாப்பமின்றி வைக்கப்பட்டிருப்பதால், மிக விரைவில் கெட்டுப் போய்விடும். கடையிலிருந்து வாங்கி வரும் முட்டை மிக விரைவில் கெட்டுப் போகாமலிருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடையிலிருந்து வாங்கி வரும் முட்டைகள் கெட்டுப் போகாமலிருக்க வேண்டுமென்றால், முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பது அவசியம். அப்படி குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை வைத்திருக்கும்போது நீண்ட காலத்திற்கு முட்டைகள் கெட்டுப் போகாமலிருக்கும்.

health tipsகடைகளுக்கு சென்று முட்டைகளை வாங்கும்போதே சால்மோனெல்லா என்ற தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். தரச் சான்றிதழ் வழங்கப்படாத முட்டைகளை வாங்கவே கூடாது.

அதேபோல, குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியே எடுத்த உடனேயே இந்த முட்டைகளை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. மாறாக அரை மணி நேரம் சென்ற பிறகுதான் சமையலுக்கு அவற்றை பயன்படுத்த வேண்டும். மேலும் முட்டைகளை ஈரப்பதமில்லாத இடங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.