குளிர்காலத்தில் சூடான நீர் குடிக்கலாமா.? குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன.!?



shall-we-drink-hot-water-at-winter-season

குளிர்காலத்தில் சூடான நீர் குடிக்கலாமா?

பொதுவாக குளிர்காலத்தில் பலரும் குளிருக்கு இதமாக சூடான நீரை குடித்து வருகின்றனர். குளிர் காலத்தில் சூடான நீரை குடிக்கலாமா என்று பலரும் யோசித்து வருகின்றனர். எனவே குளிர்காலத்தில் சுடுதண்ணீர் அதிகமாக குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதையும், மருத்துவர்கள் கூறும் அறிவுரையும் குறித்து இப்பதிவில் விளக்கமாக காணலாம்.

hot water

மருத்துவர்களின் அறிவுரை

பொதுவாக குளிர் காலத்தில் நாம் அதிகமாக தண்ணீரை குடிக்க மாட்டோம். அந்த மாதிரி நேரங்களில் சுடு தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது நம் உடலில் உள்ள தண்ணீர் சிறுநீர் வழியாக அதிகமாக வெளியேறிவிடும். எனவே உடலில் நீர் இழப்பு ஏற்படும் அபாயம் உண்டாகும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Tips :நறுக்கிய பழங்கள் நிறம் மாறாமல் பாதுகாக்க என்ன செய்யலாம்.!?

குளிர்காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கு பலரும் சுடுதண்ணீரை இதமாக இருக்கும் என்று அதிகமாக குடித்து வருகின்றனர். இது உடலில் நன்மையை ஏற்படுத்துவதற்கு பதிலாக அதிகமாக தீமையைத் தான் தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

hot water

சுடுதண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

மேலும் குளிர் காலத்தில் அதிகமாக சுடுதண்ணீர் குடிப்பவர்களுக்கு செரிமான பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, உடல் எடை அதிகரிப்பு, தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. எனவே குளிர்காலத்தில் அதிகமாக சுடுதண்ணீர் வைத்து குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படிங்க: நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை மலர்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா.!?