புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை மலர்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா.!?
வாகை மரத்தில் இருந்து கிடைக்கும் வாகை பூவை நம் முன்னோர்கள் வெற்றியின் மலராக கருதி வந்தனர். இது குறிப்பாக இந்தியாவில் அதிகமாக காணப்படும் மரமாகும். வாகை மரம் சாதாரணமாக 6 முதல் 12 மீட்டர்ச் உயரத்திற்கு வளரக்கூடியது. வாகை பூ மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. இந்த வாகை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களுமே மருத்துவ குணங்கள் நிறைந்தவைகளாக கருதப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக வாகை பூவில் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்கள் உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
வாகை பூவின் மருத்துவகுணங்கள்
1. மன அழுத்தம் - வாகை பூ பதட்டத்தை குறைத்து, மன அழுத்தத்தை போக்குவதற்குப் பயன்படுகிறது.
2. அழற்சிமருந்து - வாகை பூவை அரைத்து வீக்கம், அலர்ஜி உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் உடனடியாக குணமடையும்.
3. தலைவலி - நாட்பட்ட தலைவலியைக் குறைக்கவும் மற்றும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவியாக இருக்கும்.
4. சருமத்திற்கு பயன் - சருமத்திற்கான சில சோப் மற்றும் கிரீம் வகைகளில், வாகை பூ பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வாகை பூவை அரைத்து முகத்தில் தினமும் தேய்த்து கழுவி வந்தால் தேமல், அரிப்பு, முகப்பரு இது போன்ற பிரச்சினைகளை குறைக்க உதவும். இது தவிர, வாகை பூவில் மேலும் பல நன்மைகள் உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பட்டை.. வேறு என்னென்ன நன்மைகள்.!?
இதையும் படிங்க: உங்களுக்கு துரோகம் நடக்க போவதை உணர்த்தும் அறிகுறிகள்..! கவனித்தால் தப்பிக்கலாம்.!