காதலர்களை பிரிக்க பள்ளி நிர்வாகம் எடுத்த புதிய முயற்சி; முடிவில் நடந்த விபரீதம்

காதலர்களை பிரிக்க பள்ளி நிர்வாகம் எடுத்த புதிய முயற்சி; முடிவில் நடந்த விபரீதம்



school-management-forced-to-tie-rakki-boy-tried-suicide

ஆண், பெண் இருபாலரும் பயிலும் பள்ளிகளில் மாணவ மாணவிகளிடையே காதல் மலர்வது இயற்கையாகவே வந்துவிடும். அதனை தடுக்க அணைத்து பள்ளிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.

tying raaki

அப்படி ஒரு பள்ளி காதலர்களை பிரிக்க ஆக்ராவில் உள்ள தனியார் பள்ளி எடுத்த முயற்சியால் மாணவனின் வாழக்கை கேள்விக்குறியாகியுள்ளது.

பள்ளி நிர்வாகம் தான் காதலித்த பெண்ணை தனக்கு ராக்கி கட்ட வற்புறுத்தியதால் மனமுடைந்த மாணவன் பள்ளி மாடியிலிருந்து குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவில் உள்ள தனியார் பள்ளியில் திலீப்குமார் ஷா என்ற மாணவன் படித்து வந்துள்ளார். அந்த மாணவன் அதே பள்ளியில் படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் இதனை குறித்து பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் புகார் அளித்தனர்.

இதனையடுத்து பள்ளி நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை மாணவன்,மாணவி மற்றும் அவர்களது பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து தான் காதலித்த பெண்ணையே அந்த மாணவனின் கையில் ராக்கி கட்ட வற்புறுத்தினர்.

tying raaki

இதனால் மனமுடைந்த அந்த மாணவன்  பள்ளி கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு வேகமாக சென்று அங்கிருந்து குதித்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது 

இதனை தொடர்ந்து பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், போலீசார் பள்ளி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.