அரிசி கழுவிய நீரில், இவ்வளவு நன்மைகளா.?! எப்படி பயன்படுத்தலாம்.?!

அரிசி கழுவிய நீரில், இவ்வளவு நன்மைகளா.?! எப்படி பயன்படுத்தலாம்.?!



rice-water-benefits

பொதுவாக நாம் தினமும் சாதம் வடிக்கும் போது அரிசியை கழுவி விட்டு அதன் தண்ணீரை கீழே ஊற்றுவோம். ஆனால் அதில் ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது என்று நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த நீர் கூந்தலுக்குத் தேவையான சத்துக்களும், மற்றும் அழகு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் இருக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிராமப்புறங்களில் இன்றும் சில பெரியோர்கள் தன் பேரப்பிள்ளைகளை அரிசி கழுவின தண்ணீரில் குளிப்பாட்டி வருகின்றனர். சில அரிசி வகைகளைக் கொண்டு உணவு தயாரித்து அதில் நெய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம். இதில் உள்ள தாதுக்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. 

Rice water

அரிசி கழுவிய தண்ணீரை கீழே ஊற்றாமல் அதனை சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இதற்கு முதலில் அரிசியை 2 முறை கழுவி கீழே ஊற்றிவிட்டு மூன்றாவதாக கழுவும் தண்ணீரை எடுத்துப் பயன்படுத்தவும். இப்படி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்த 3-வது தண்ணியை சூடு படுத்தி குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றி உடல் முழுவதும் குளிக்க வைத்தால் உடலுக்கு தேவையான பலம் கிடைத்து விரைவில் நடக்க ஆரம்பிப்பார்கள்.

இந்த தண்ணீரைக் கொண்டு சிக்கன், மீன் மற்றும் வேறு எந்த வகையான கறியாக இருந்தாலும் கழுவி அதனை சமையலுக்கு பயன்படுத்தலாம். இப்படி சமைக்கும் போது சுவையும், மணமும் அதிகரிப்பதை காணலாம். அரிசி கழுவிய தண்ணீரில் சமைத்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளும்போது நமது சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் இருக்கும். இது சரும நிறமிகளின் மீது செயல்படுவதால் சரும நிறமும், அழகும் மேம்பட உதவுகிறது. 

Rice water

இதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக தயாரிக்கப்படும் ஹெர்பல் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதில் கூட இந்த தண்ணீரைப் பயன்படுத்தி வருகின்றனர். நம் உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை மேம்படுத்த அரசி கழுவிய தண்ணீரை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த அரிசி கழுவிய நீருடன் ஷாம்புவை கலந்து தலைக்கு குளிக்கும் போது, முடியின் வேர்கள் வலுப்படுவதுடன் முடி வளர்ச்சி ஏற்படும். மேலும் அரிசி கழுவிய தண்ணீருடன் சிறிது உப்பு, கொஞ்சம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்து உடல் முழுவதும்  ஸ்க்ரப்பாகவும், சன் ஸ்கிரீனாகவும் பயன்படுத்தலாம்.