மருத்துவம் லைப் ஸ்டைல் 18 Plus

இதை தினமும் சாப்பிட்டுவந்தால் ஆண்மை குறைவு என்ற பேச்சுக்கே இடம் இல்லை! என்ன தெரியுமா அது?

Summary:

Reasons for low man power and tips to increase it

மனிதனின் நாகரிகம் வளர்ந்துவிட்டது. அதன் தாக்கம்தான் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள். உணவுகளில் சேர்க்கப்படும் பலவிதமான ரசாயனங்கள், கலப்படங்கள் மனித உறுப்புகளை வெகுவாக பாதிக்கின்றது.

அதில் ஒன்றுதான் ஆண்மை குறைவு. ஆண்மை குறைவு காரணமாக இன்று விவாகரத்து கேட்கும் பெண்கள் ஏராளம். குடும்பங்களில் சண்டை, விவாகரத்து இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஆண்மை குறைவும் ஒரு காரணம்தான்.

நாம் என்னதான் மருத்துவர்களை அணுகி அதற்கான மருந்துகளை உட்கொண்டாலும் நமது முன்னோர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்த சில உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆண்மை குறைவை சரி செய்ய முடியும்.

21 வயது முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் தங்களது உணவில் வால்நட்டை சேர்த்துக்கொண்டதன் மூலம் ஆண்மை அதிகரித்துள்ளதாக 2012இல் நடந்த ஆராய்ச்சி ஓன்று கூறியுள்ளது.

இந்த வால்நட்டைத் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்ததால் அவர்களின் விந்தணுக்கள் உறுதியடைந்திருந்ததையும் அந்த ஆய்வு உறுதி செய்தது.உலகம் முழுவதிலும் 70 மில்லியன் பேர் ஆண்மைக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

வால்நட்டில் உள்ள ஆல்பா - லியோலெனிக் என்னும் அமிலம் குறிப்பாக, விந்தணுக்களைப் பலப்படுத்தவும் ஆண்மையை விருத்தியடையவும் செய்கிறது. எனவே ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் கடைகளில் கண்ட உணவுகளை வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து இதுபோன்ற சக்தி தரும் உணவுகளை உண்பதன் மூலம் ஆண்மை குறைபாட்டில் இருந்து விரைவில் வெளிவரலாம்.


Advertisement