
ஆன்லைன் மூலம் விபச்சாரத்திற்கு ஆட்களை வலைவீசும் வழக்கம் பரவி வருகிறது. இது நமது சென்னையையும் விட்டு வைக்கவில்லை.
சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை அழைத்து வந்து விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஓட்டலில் உள்ள சொகுசு அறை ஒன்றில் 2 அழகிகள் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.
அவர்கள் உக்ரைன், உஸ்பெகிஸ்தான் நாடுகளில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தரகர்கள் மதியழகன், பாண்டியன், ஓட்டல் ஊழியர்கள் முரளி, முகமது அசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள தரகர் ஒருவர் இதில் முக்கிய குற்றவாளி ஆவார். அவர் பெங்களூருவில் தங்கி இருந்துகொண்டு, வெளிநாடுகளில் இருந்து அழகிகளை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.
மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அழகிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கேரள விபசார தரகரை போலீசார் தேடி வருகிறார்கள். மீட்கப்பட்ட வெளிநாட்டு விபசார அழகிகள் இருவரும் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement